விளையாட்டு
538 கோடி ரூபா இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

Jun 19, 2025 - 06:32 PM -

0

538 கோடி ரூபா இழப்பீடு வழங்கும் பிசிசிஐ

கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.538 கோடி இழப்பீடு வழங்க பிசிசிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை பல்வேறு அணிகள் தொடரில் இருந்து விலகியது, புதிய அணிகள் இணைந்ததும் நடந்துள்ளது.

 

இதே போல், 2011 ஐபிஎல் தொடரில் கொச்சி டஸ்கர்ஸ் அணி விளையாடியது.  

 

மஹேலா ஜெயவர்த்தனே தலைமையிலான இந்த அணியில், ரவீந்திர ஜடேஜா, மெக்கல்லம், ஆர்.பி.சிங், விவிவிஎஸ் லக்ஸ்மனன், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இந்த அணியில் இருந்தனர்.

 

இந்த தொடரில் 14 போட்டிகளில், 6 வெற்றி 8 தோல்வியுடன் 8 ஆவது இடத்தை பிடித்தது. இந்த ஒரு தொடருடன் அந்த அணி நீக்கப்பட்டது.

 

கொச்சி டஸ்கர்ஸ் அணி ரூபாய் 153 கோடி வங்கி உத்தரவாதம் தராததால், அந்த அணியின் உரிமத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.

 

இதை எதிர்த்து, கொச்சி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளரான ரெண்டென்ஸ்வஸ் ஸ்போர்ட் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.

 

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு ரூ.384 கோடி இழப்பீடு வழங்க 2015 ஆம் ஆண்டு பிசிசிஐ க்கு உத்தரவிட்டது.

 

இழப்பீடு வேண்டாம், தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என அணியின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

 

இழப்பீடு வழங்க மறுத்து, 10 ஆண்டுகளாக இந்த வழக்கை பிசிசிஐ நடத்தி வந்த நிலையில், தற்போது 538 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.

 

2028 ஐபிஎல் தொடரில், ஐபிஎல் போட்டிகளை 94 ஆக அதிகரிக்க திட்டமிட்டு வரும் நிலையில், மீண்டும் கொச்சி டஸ்கர்ஸ் அணியும் ஐபிஎல் தொடரில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.    

Comments
0

MOST READ
01
02
03
04
05