செய்திகள்
சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்த தகவல்

Jun 19, 2025 - 07:43 PM -

0

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்த தகவல்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்றீரியாக்கள் மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (19) நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. 

குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அரச சட்டத்தரணி இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05