Jun 20, 2025 - 12:59 PM -
0
NDB வங்கியானது ரோயல் கல்லூரி ரக்பி பருவத்திற்கான நிகழ்வின் இணை அனுசரணையாளராக ரோயல் கல்லூரி ரக்பிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது தொடர்பாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இதற்கிணங்க NDB ரோயல் கல்லூரியுடன் இதற்காக தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக கூட்டு சேர்ந்துள்ளது. வரவிருக்கும் ஒரு உற்சாகமான பருவத்தை எதிர்பார்த்து, கொழும்பில் அமைந்துள்ள Courtyard by Marriott இல் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த பங்குடைமை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பாடசாலை ரக்பி அணிகளில் ஒன்றான ரோயல் கல்லூரி விளையாட்டில் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. NDB இன் நீடித்த பங்குடைமையானது , விளையாட்டு சிறப்பை வளர்ப்பதற்கும் இலங்கை இளைஞர்களை மேம்படுத்துவதற்குமான வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய NDB வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரியான கெலும் எதிரிசிங்க, தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்:
“NDB-யில், இளைஞர்களை மேம்படுத்துவதிலும், தலைமைத்துவத்தை வளர்ப்பதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். களத்திலும் வெளியேயும் எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக ரக்பி திகழ்கிறது . ரோயல் கல்லூரி ரக்பி தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, மேலும் அவர்களின் சிறப்பை நோக்கிய பயணத்தில் பங்குதாரராக அவர்களுடன் இணைந்திருப்பதில் NDB பெருமை கொள்கிறது.”
இந்த ஆண்டு ரோயல் ரக்பி பருவமானது சிலிர்ப்பூட்டும் சந்திப்புகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது மற்றும் இலங்கையின் பாடசாலை விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிராட்பி ஷீல்ட் என்கவுண்டரில் முடிவடைகிறது. எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது, NDB தான் வழங்கும் பங்களிப்பில் உறுதியாக உள்ளதுடன் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நீலம் மற்றும் தங்கத்தின் பின்னால் அணிதிரளும்போது அவர்களுக்கு அருகில் நிற்பதில் பெருமிதமடைகிறது.
ரோயல் கல்லூரி ரக்பியுடனான NDB இன் தொடர்பானது சமூகங்களை மேம்படுத்தும் மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மூலோபாய பங்குடைமைகள் மூலம் நீடித்த மதிப்பை உருவாக்கும் வங்கியின் பரந்த நோக்கத்திற்கு ஒரு சான்றாகும். வங்கியானது இந்த நீடித்த ஆதரவின் மூலம், திறமைகளை வளர்த்தல் , பாரம்பரியத்தை கொண்டாடுதல் மற்றும் எதிர்காலத் தலைவர்களை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

