செய்திகள்
காலி பிரதி மேயரின் மொட்டு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Jun 20, 2025 - 01:17 PM -

0

காலி பிரதி மேயரின் மொட்டு கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

காலி மாநகர சபையின் பிரதி மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியந்த கொடகம சஹபந்துவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையொப்பதுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காலி மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து கட்சி அறிவித்திருந்தது. 

இத்தகைய பின்னணியில், கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு மாறாக வாக்களிப்பின் போது செயற்பட்டதாகவும், அதன் விளைவாக, பிரதி மேயராக பிரியந்த கொடகம தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அவரின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்படுவதாகவும், கட்சியில் வகிக்கும் அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கான உரிமையும் இழக்கப்படுவதாக அந்த அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05