Jun 20, 2025 - 03:13 PM -
0
16 எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், 11 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களையும் கொண்ட மாத்தளை ரத்தோட்டை உக்குவெல பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிமல் கருணாதிலக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 14 வாக்குகள் கிடைத்தன.
அதேநேரம் 12 வாக்குகளை பெற்ற ஐக்கிய தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மீரா சைபு மொஹமட் ரஃபி அதன் பிரதி தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உக்குவெல பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் போது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையில், சேருவில பிரதேச சபையின் தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் எம்.ஜி.ஜே. துஷார சம்பத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சர்வ ஜன அதிகாரத்தின் கே.ஜி. திமுத்து பிரியங்கர பிரதித் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பிரதேச சபையை நிறுவும் பணிகள் இன்று (20) காலை உள்ளூராட்சி ஆணையர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.
அப்போது, தேசிய மக்கள் சக்தியால் தவிசாளர் பதவிக்கு டபிள்யூ.கே. நிலந்த சுரித் டயஸ் முன்மொழியப்பட்ட அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் மொஹமட் நைசர் மொஹமட் பைசானின் பெயர் முன்மொழியப்பட்டது.
அப்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் 22 வாக்குகளைப் பெற்று பேருவளை பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

