Jun 20, 2025 - 03:45 PM -
0
கதிர்காம முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தைக் காண பக்தர்கள் இன்று (20) காலை காட்டுப்பாதை வழியாகப் பாதயாத்திரையை மேற்கொண்டனர்.
பக்தர்களுக்காக லாகுகலை உகந்தை வனப் பாதையின் நுழைவாயில், உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
‘ஆரோஹரா’ கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தை இன்று ஆரம்பித்தனர்.
மேலும், எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் ஜூலை 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
அத்துடன், இன்று திறக்கப்பட்ட கதிர்காம காட்டுப்பாதை எதிர்வரும் 2025 ஜூலை 4ஆம் திகதி மூடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
--