Jun 20, 2025 - 04:25 PM -
0
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி கிளையின் பிரதிய ஆணையாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.
இலஞ்சமாகப் பெறப்பட்ட சுமார் 4 மில்லியன் ரூபாயை வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேக நபர்கள் முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மூன்று சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி தனுஜா லக்மாலி ஜயதுங்க உத்தரவிட்டார்.
அதன்படி, அவர்களை ஜூலை 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
உரிமங்களைப் பெற வந்த பொதுமக்களிடமிருந்து இலஞ்சமாகப் பெற்ற பணத்தை சந்தேக நபர்கள் வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

