செய்திகள்
தரமற்ற பழுப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

Jun 20, 2025 - 06:14 PM -

0

தரமற்ற பழுப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

தரநிலைகளுக்கு இணங்காத பழுப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தையில் விற்கப்படவிருந்த பழுப்பு சீனியில் வண்ணம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் போது சீதுவ பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. 

இதன்போது மாதிரிகள், இலங்கை தரநிலைகளுக்கு இணங்கவில்லை என்பதை ஆய்வக அறிக்கைகள் உறுதிப்படுத்திய பின்னர், பழுப்பு சீனியை விற்பனைக்குக் காட்சிப்படுத்திய மற்றும் வழங்கிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

அதன்படி, நேற்று (19) குற்றங்களை ஒப்புக்கொண்ட குறித்த நிறுவனத்திற்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததற்காக தெமட்டகொடை மற்றும் மட்டக்குளி பகுதிகளில் உள்ள மூன்று பல்பொருள் அங்காடி கிளைகளுக்கு எதிராக கடந்த 18ஆம் திகதி தலா 200,000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த இரண்டு மாதங்களில் 187க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளில் சோதனைகளை நடத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05