செய்திகள்
மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு : துணை முதல்வர் அதிரடி உத்தரவு

Jun 20, 2025 - 09:12 PM -

0

மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு : துணை முதல்வர் அதிரடி உத்தரவு

வவுனியா மாநகரசபைக்கு உட்பட்ட மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதை அவதானித்த மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன், திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தபோது, மாடு வெட்டும் இடத்தில் சுகாதார சீர்கேடுகள் இருப்பதை உறுதி செய்தார். 

இதனையடுத்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ள கண்காணிப்பு கெமராக்களை உடனடியாக பழுது நீக்கி, அவற்றின் காட்சிகளை மாநகரசபை அலுவலகத்தில் இருந்து பார்வையிடுவதற்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். 

அத்துடன், மாடு வெட்டும் இடத்தில் பணியாற்றும் நபர்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வர், தினசரி வெட்டப்படும் மாடுகளின் விபரங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாடுகளின் விபரங்களைக் கேட்டறிந்தார். 

எதிர்காலத்தில் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05