சினிமா
ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

Jun 21, 2025 - 12:08 PM -

0

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. 

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 

இந்நிலையில் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவான ஃபர்ஸ்ட் ரோர் என்ற தலைப்பில் படக்குழு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05