Jun 21, 2025 - 01:08 PM -
0
காணி உரிமை தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 21 காலை இடம்பெற்றது.
மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 'மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழிப் போராட்டம்' எனும் தொனிப்பொருளில் ஹட்டன் பல்பொருள் அங்காடியில் இருந்து பேருந்து தரிப்பிட்டம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மலையக மக்களின் காணி உரிமையை கோரி கோஷங்கள், பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள், அரசியல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

