Jun 21, 2025 - 04:17 PM -
0
மது போதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி தொடர்பாக பொலிஸார் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சமீப காலமாக பரவிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்களை உருவாக்குபவர்கள் அல்லது இடுகையிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

