செய்திகள்
பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

Jun 21, 2025 - 06:42 PM -

0

பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

UPDATE - பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். 

விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

 

……………….

 

UPDATE - பதுளை, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

………………………..

 

பதுளை - மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05