செய்திகள்
இன்று நள்ளிரவு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகாது

Jun 21, 2025 - 10:42 PM -

0

இன்று நள்ளிரவு  சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகாது

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 

அதில், 2024 (2025) சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (21) நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படமாட்டாது என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, இன்று நள்ளிரவில் சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியிடப்படாது எனவும், பெறுபேறுகள் வெளியிடப்படுவதாக சமூக ஊடகங்களில் பரிமாறப்படும் அனைத்து செய்திகளும் தவறானவை எனவும் அமைச்சு வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05