Jun 22, 2025 - 01:56 PM -
0
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்களை குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ஓட்டங்களில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2 ஆவது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

