வணிகம்
செலான் வங்கி The Wedding Show 2025 இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக இணைந்தது

Jun 23, 2025 - 09:12 AM -

0

செலான் வங்கி The Wedding Show 2025 இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக இணைந்தது

அண்மையில் சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வெற்றிகரமாக நடந்தேறிய நாட்டின் மிகப்பெரிய திருமண நிகழ்வான Wedding Show 2025இன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்குதாரராக இணைந்தது. அத்துடன் SEYLAN MEGA REWARDS வாடிக்கையாளர்ளையும் இந்நிகழ்வின் போது கௌரவித்து அவர்கள் செலான் வங்கி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாராட்டுதல்களையும் வழங்கியது. 

திருமணம், திருமண ஆண்டுவிழாக்கள், பிரசவம், 60ஆவது பிறந்தநாள் ஆகிய வாழ்க்கையின் முக்கிய தருணங்களுடன் மருத்துவமனை அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைகள் வரை வாழ்வின் நெருக்கடியான தருணங்களில் நிதித்தொகையை வழங்கும் ஒரே விசுவாசத் திட்டமாக MEGA REWARDS உள்ளது. அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கியுடன் நீடித்த மற்றும் விசுவாசமான உறவை கொண்டிருக்கும் தகுதியான நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு MEGA REWARDSஇன் நன்மைகள் வழங்கப்படுகின்றன. 

வங்கிக்கு அதன் வாடிக்கையாளர்களின் நீண்டகால விசுவாசத்தை கௌரவிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை The Wedding Show 2025 வழங்கியது. தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்த இந்த வாடிக்கையாளர்கள், முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட சாதனைகளைக் கொண்டாடும் வகையில் பரிசுகளைப் பெற்றதுடன் வாழ்நாள் முழுவதும் இது மறக்கமுடியாத நாளாக இருக்கும் என தெரிவித்தனர். திருமண திட்டமிடலுக்கு பயனளிக்கும் அத்தியாவசிய நிதி தீர்வுகளுடன், தனிநபர் கடன்கள் மற்றும் கடனட்டைகள் உள்ளிட்ட சேவைகளுடன் MEGA REWARDS திட்டமும் இந் நிகழ்வில் ஊக்குவிக்கப்பட்டது. 

நாட்டின் மிகப்பெரிய திருமண நிகழ்வாக, இந் நிகழ்வு நாட்டின் திருமணத் துறையில் சிறந்தவர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது. முன்னணி விடுதிகள், நிகழ்வு முகாமைத்துவ நிறுவனங்கள், திருமணம் திட்டமிடும் நிறுவனங்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர்கள், அழகுக்கலை நிபுணர்கள், ஆடை மற்றும் வடிவமைப்பாளர்கள் என 110 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந் நிகழ்வில், 12,000க்கும் மேற்பட்ட தம்பதிகள் வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லை கொண்டாடுவதற்கான தெரிவுகளை ஆராய முடிந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05