சினிமா
இன்று மாலை வெளியாகும் கூலி பட அப்டேட்

Jun 23, 2025 - 11:43 AM -

0

இன்று மாலை வெளியாகும் கூலி பட அப்டேட்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

 

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதி வெளியாகிறது.

 

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது.

 

இந்நிலையில் படத்தின் அப்டேட்டை இன்று (23) மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05