Jun 23, 2025 - 12:10 PM -
0
நுவரெலியா மாநகர சபையின் புதிய மேயராக உபாலி வணிகசேகர பதவியேற்பு, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தலைமையில் இன்று (23) நடைபெற்றது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற திறந்த வாக்கெடுப்பில் மூன்றுக்கு நான்கு என்ற பெரும்பான்மை வாக்குகளால் நுவரெலியா மாநகர சபையின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உபாலி வணிகசேகர, இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயர் மஹிந்த தொடம்பி கமகே, முன்னாள் பிரதி மேயர் திஸ்ஸ செனவிரத்ன, நுவரெலியா பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், நுவரெலியா மாநகர சபையின் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாநகர சபை உறுப்பினர்கள், நுவரெலியா வர்த்தக சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் கட்சி செயற்பாட்டாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
--

