வடக்கு
3 நாள்களுக்கு இடம்பெறவுள்ள அகிம்சை வழி போராட்டம்

Jun 23, 2025 - 02:05 PM -

0

3 நாள்களுக்கு இடம்பெறவுள்ள அகிம்சை வழி போராட்டம்


மனிதப் புதைகுழிகள் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடையாத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதுடன் அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுதுத்தும் வகையில் இந்த 'அணையா தீபம்' போராட்டம் இன்று (23) செம்மணியில் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அபைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

இன்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23, 24, 25 ஆகிய 3 நாள்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05