Jun 23, 2025 - 02:39 PM -
0
கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும், புகையிரத சாரதியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மலைப்பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, நேற்று (22) இரவு சுமார் 7.50 மணியளவில் கலபட மற்றும் வட்டவளை இடையிலான புகையிரதப் பாதையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால், மதியம் 12:45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயாவுக்கு புறப்பட்ட புகையிரதம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியது.
புகையிரதப் பாதையில் மரம் விழுந்ததைக் கண்ட சாரதி, சாமர்த்தியமாக புகையிரதத்தை உடனடியாக நிறுத்தி விபத்தைத் தடுத்தார். பின்னர், சாரதியின் வழிகாட்டுதலின்படி, பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்கள் இணைந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
--

