Jun 23, 2025 - 03:11 PM -
0
அறநெறிக் கல்விதான் மாணவர்களின் ஒழுக்கத்தை போதிப்பதற்கும் நல்லொழுக்கமும் கட்டுக்கோப்புள்ள சமூகமும் நிலைபெறுவதற்கும் அஸ்திவாரமிடுகின்றது.
அந்த வகையில் நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் அறநெறி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும், கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து கொட்டக்கலை இராமகிருஷ்ணா மிஷன் சிவானந்தா நலன்புரி நிலையத்திற்கு நேற்று (22) சென்றனர்.
அங்கு நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் சென்ற மாணவர்களுக்கு சைவ சொற்பொழிவு - இறையுணர்வு அறநெறி கற்றல் நடவடிக்கை ஆன்மீக யோகாசனம் மற்றும் யோகாவின் பல நன்மைகள் பற்றி கற்பிக்கப்பட்டு சென்ற மாணவர்கள் அனைவருக்கும் மதிய நேர உணவு வழங்கப்பட்டது.
கொட்டக்கலை இராமகிருஷ்ணா மிஷன் சிவானந்தா நலன்புரி நிலையம் என்பது மிகவும் ஆன்மீகத்துக்கு மதிப்பளித்து ஆன்மிகத்தை வளர்க்கும் நோக்கில் பல சிறப்பான அம்சங்களை தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வகையில் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
--

