வணிகம்
பீட்சா ஹட் வாகன ஓட்டுநர்கள் தமது சுவையான உணவுகளை பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் வழங்க சியெட் உதவும்

Jun 23, 2025 - 05:04 PM -

0

பீட்சா ஹட் வாகன ஓட்டுநர்கள் தமது சுவையான உணவுகளை பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் வழங்க சியெட் உதவும்

பீட்சாக்கள் மற்றும் துரித உணவுப் பொருட்களை சூடு ஆறுவதற்கு முன்னர் விநியோகம் செய்வதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் சுமார் 800 உணவு விநியோக வாகன ஓட்டுனர்கள், சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) மற்றும் இலங்கையில் பீட்சா ஹட் மற்றும் டகோ பெல்லின் ஒரே உரிமையாளரான கம்மா பீட்சா கிராஃப்ட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் (Gamma Pizzakraft Lanka (Pvt) Ltd) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக,தமது பணியைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற முடிகிறது. 

இந்த பங்குடைமையானது, பீட்சாஹட்டின் பதிவுசெய்யப்பட்ட விநியோக வாகன ஓட்டுனர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் டயர்களில் சிறப்பு விலைக்கழிவுகள் உட்பட பல்வேறு நன்மைகளை அணுக உதவுகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் உயர்தர டயர்களை மிகவும் நியாயமான விலையில் வழங்கவும், பாதுகாப்பான மற்றும் திறமையான பயணத்தை ஊக்குவிக்கவும் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக்கழிவுகளை 600க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சியெட் விற்பனையாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து இரண்டாம் நிலை ஊடகப் பங்காளர் விற்பனை நிலையங்களிலும் பெறலாம், இது பீட்சாஹட் விநியோக வாகன ஓட்டுனர்கள் எங்கிருந்தாலும் எளிதாக அணுகுவதை உறுதி செய்கிறது. 

அவர்களின் வாழ்க்கை இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்களில் பயணித்தாலும், வாகனமோட்டுநர்கள் எமக்கு பிரதானமானவர்கள் என்று சியெட் களனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. ஷமல் குணவர்தன கூறினார். பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செலவு-செயல்திறன் ஆகியவை எமது தயாரிப்புகளின் முக்கிய பண்புகளாகும், மேலும் சியெட் உடன் பீட்சா ஹட்டின் விநியோக ஊழியர்கள் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும், பாதுகாப்பாகவும் சவாரி செய்வதை ஆதரிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

கம்மா பீட்சா கிராஃப்ட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் சிந்தக மகேஷ் கூறுகையில், எமது ஒப்படைப்பு ஊழியர்களின் பாதுகாப்பு எமக்கு மிகவும் முக்கியமானது. உயர்தர நம்பகமான சாதனங்களைப் பயன்படுத்துவது, சரியான நேரத்தில் வெற்றிகரமாக விநியோகத்தை வழங்குவதில் ஒரு முக்கிய அங்கமாகும். எனவே, எமது ஒப்படைப்பு குழுவினருக்கு பண மதிப்புக்கு ஏற்ற வகையில் டயர் தீர்வுகளை வழங்க சியெட்டுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்றார். 

இலங்கையில் அதிகம் விற்பனை ஆகும் டயர் பிராண்ட் சியெட் ஆகும். மேலும் நாட்டின் நியூமெடிக் டயர் தேவைகளில் பாதியை சியெட் களனி ஹோல்டிங்ஸ் உற்பத்தி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட டயர்களின் மீதான சார்புநிலையை குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியை சேமிக்க உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கிறது. இலங்கையில் இதன் உற்பத்தி செயற்பாடுகள் ரேடியல் டயர்களில் (பயணிகள் கார்கள், வேன்கள் மற்றும் விளையாட்டு நோக்கு வாகனங்கள்) வர்த்தக ரீதியான (நைலோன் மற்றும் ரேடியல்) மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் மற்றும் விவசாயப் பிரிவு வாகனங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.

Comments
0

MOST READ