செய்திகள்
இரண்டாவது டெஸ்ட் - இலங்கை அணியில் மாற்றம்

Jun 23, 2025 - 05:43 PM -

0

இரண்டாவது டெஸ்ட் - இலங்கை அணியில் மாற்றம்

  காலி டெஸ்டில் இடது பக்க வலியால் அவதிப்பட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்நாயக்க, பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

 

அதேபோல், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

அவர்களுக்குப் பதிலாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். 

 

இலங்கைக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விஷ்வ பெர்னாண்டோ, 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

 

மறுபுறம், வெல்லாலகே ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார், 2022 இல் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார். 

 

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

 

இந்தத் தொடர் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் கீழ் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணி விபரம் பின்வருமாறு :

 

தனஞ்சய டி சில்வா (தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், குசல் மெந்திஸ், கமிந்து மெந்திஸ், பசிந்து சூரியபண்டார, சோனல் தினுஷ, துனித் வெல்லாலகே, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித பெர்னாண்டோ, கசுன் ராஜித, விஷ்வ பெர்னாண்டோ, இசித விஜேசுந்தர.

Comments
0

MOST READ
01
02
03
04
05