Jun 23, 2025 - 06:08 PM -
0
சினிமா துறையினர் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல. பாலிவுட், டோலிவுட், கன்னடம் என பல சினிமா துறைகளில் பிரபலங்கள் போதை பொருள் பயன்படுத்தி சிக்கி இருக்கின்றனர்.
தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் போதை பொருள் வழக்கில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய இருக்கிறது.
மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக பிரசாத் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் அவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தினாரா என பொலிஸார் ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவர் drugs பயன்படுத்தியது உறுதியானது.
அதனால் அவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து மேலும் கழுகு பட புகழ் நடிகர் கிருஷ்ணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.