Jun 23, 2025 - 06:56 PM -
0
யங் யுனைடெட் விளையாட்டு கழகத்தினரால் ஹஜ் திருநாளை முன்னிட்டு ஹஜ் கிண்ணத்திற்கான அணி அணிக்கு 9 பேர் கொண்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி மற்றும் நேற்று (22) நடைபெற்றது.
இப்போட்டிகளை இளைஞர்களுக்கு இடையிலான மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 18 கழகங்கள் இப்போட்டி தொடரில் பங்கு பற்றியது.
இவ் உதைப்பந்தாட்ட சற்றுப் போட்டிகளில் இறுதிப்போட்டியில் இஸ்கிராப் தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகமும் யங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தினரும் இறுதிப்போட்டியில் மோதின.
போட்டியானது மூன்றுக்கு மூன்று என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது. பின்னர் தண்ட உதை மூலம் மூன்றுக்கு நான்கு என்ற கோல் அடிப்படையில் யங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் கிண்ணத்தை சுவீகரித்தது.
அதே நேரம் இஸ்கிராப் தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. போட்டி தொடரில் சிறந்த வீரராக சன் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் யோகேஸ்வரனும், சிறந்த கோல் காப்பாளராக யங் பேர்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் தனுவும் தெரிவாகினர்.
அதே நேரம் வளர்ந்து வரும் வீரர்காண விருதை யூனிட்டி விளையாட்டு கழகத்தின் வசந்த லக்ஷன் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
--

