செய்திகள்
119 அவசர அழைப்பு சேவை : பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

Jun 23, 2025 - 08:15 PM -

0

119 அவசர அழைப்பு சேவை : பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 119 அவசர அழைப்பு சேவைக்கு வரும் அழைப்புகளில், உண்மையான அவசர முறைப்பாடுகளுக்கு பதிலாக, தவறான முறைப்பாடுகளும், பிற சேவைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்காகவும் முறையற்ற அழைப்புகள் வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இத்தகைய தேவையற்ற அழைப்புகள் காரணமாக, 119 அவசர அழைப்பு மத்திய நிலையத்திற்கு உண்மையான அவசர சூழ்நிலைகளில் அழைப்புகளைத் தொடர்பு கொள்ள வாய்ப்பு குறைவதாகவும், பொலிஸாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, பொலிஸ் உதவி உடனடியாக தேவைப்படாத சந்தர்ப்பங்களில், தொடர்புடைய பிற நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. 

இதன்மூலம், 119 அவசர அழைப்பு சேவையை தேவையான அவசர நிலைமைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, தங்கள் தேவைகளை திறமையாகப் பூர்த்தி செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05