Jun 24, 2025 - 09:22 AM -
0
மட்டக்களப்பு மாவட்டம் கறுவேப்பங்கேணியில் வசித்து வரும் பிரசாத் மற்றும் ரம்யா ஆகியோரின் மகன் 3 வயதும் 6 மாதங்களுமான பவிஷ்.
இவர் 150 பொது அறிவுக் கேள்விகளுக்கான சரியை விடைகளை 4 நிமிடங்கள் மற்றும் 20 நொடிகளில் கூறினார்.
மேலும், 50 சொற்களுக்கான ஒத்தச் சொற்கள், 50 சொற்களுக்கான எதிர்ச் சொற்கள் போன்றவற்றை 2 நிமிடங்களில் கூறி முடித்து, 30 சமஸ்கிருத சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை கூறி சோழன் உலக சாதனை படைத்தார்.
குழந்தையின் முயற்சியை உன்னிப்பாகக் கண்காணித்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டப் பொதுத் தலைவர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர். தனுராஜ் போன்றோர் உலக சாதனையாகப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பங்கு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தர்கள், நடுவர்களுடன் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த குழ்ந்தை பவிசுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவற்றை வழங்கிப் பாராட்டினார்கள்.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனுடன் இணந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வை கதிரவன் சமூக அபிவிருத்திக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.