Jun 24, 2025 - 10:11 AM -
0
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் நடைபெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு, உகந்தாச்சிமட பாலத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றது.
நேற்று (23) மாலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும் சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழிகளின் அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் பல்வேறு சுலோகங்களை ஏந்தி ஈடுபட்டனர்.
--