வணிகம்
Beliatta Exim Holdings தனியார் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளருக்கான BWIO விருது

Jun 24, 2025 - 01:44 PM -

0

Beliatta Exim Holdings தனியார் நிறுவனத்துக்கு சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளருக்கான BWIO விருது

இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனமான Beliatta Exim Holdings தனியார் நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் உணவு உற்பத்தியாளர் எனும் விருதை வென்றுள்ளது. Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா கல்கிஸ்ஸ பெரிய ஹோட்டலில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் போது நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ரசிக்க பேதுருஆரச்சி குறித்த விருதை பெற்றுக்கொண்டார். 

இலங்கையின் சமையற் கலையின் பாரம்பரியத்தை காத்து உலகெங்கிலுமுள்ள உணவுப் பிரியர்களுக்கு உண்மையான இலங்கை சுவையுடன் கூடிய உயர் தரத்திலான உணவுகளை பரிமாறும் நோக்கத்துடன் 2017 ஆம் ஆண்டில் Beliatta Exam Holdings நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி நிறுவனம் வாசனைத் திரவியங்கள், அச்சாரு, சட்னி, சோயாமீட், போத்தலில் அடைக்கப்பட்ட சம்பலும் கறி வகைகளும், ஜேம், பலகாரங்கள், கறுவாடு மற்றும் தேங்காய் சார்ந்த உற்பத்திகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. எப்பொழுதும் ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் இதர தர நியமங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் சகல உற்பத்திகளினதும் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. இந் நிறுவனம் உயர் தரத்திலான உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக சர்வதேச சந்தையிலும் குறிப்பாக ஜப்பானில் பிரபல்யமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதன் கிளையொன்றும் ஜப்பானில் அமைந்துள்ளது. இந்த உற்பத்திகள் Delta எனும் வர்த்தகநாமத்தில் ஜப்பானில் விநியோகிக்கப்படுவதோடு ஜப்பான் இனத்தவர்கள் மற்றும் அந் நாட்டில் வசிக்கும் இலங்கையர் மத்தியிலும் மேற்படி உற்பத்திகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. ஒன்றுக்கொன்று மாறுபட்ட கலாசாரத்துக்குரிய சமூகத்தினர் விரும்பும் சுவைகளை நன்கறிந்துள்ள Beliatta Exim Holdings வருங்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோர்களின் தேவைகளுக்கேற்றதாக தமது உற்பத்திகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கடந்த காலம் முழுவதுமாக தொடர் வளர்ச்சியை எட்டியுள்ள அந் நிறுவனம் பெரும் வலுவானதொரு விநியோக மற்றும் வணிக உதவி வலையமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் சர்வதேச ரீதியாக தமது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. 

உலகெங்கிலுமுள்ள எமது நாட்டு உணவுப் பிரியர்களுக்கு தமது உற்பத்திகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய வணிக கூட்டிணைவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நிறுவனம் தயாராக உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ்கள் பலவற்றை பெற்றுள்ள இந் நிறுவனம் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05