வடக்கு
காணி உறுதிகளை காண்பித்து போராட்டம்

Jun 24, 2025 - 03:58 PM -

0

காணி உறுதிகளை காண்பித்து போராட்டம்

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.

 

தமது உரிமைக் காணி தொடர்பில் இன்றுடன் நான்காவது நாளாக கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் இன்று காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

 

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்றும் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அன்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்டவர்களும் கத்தோலிக்க மத குருமார்களும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பொது அமைப்புகள் உட்பட மலையக மக்கள் சார் பொது அமைப்புக்களைச் சேர்ந்த சிலரும் காணி விடுவிப்பைக் கோரி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

--

Comments
0

MOST READ