செய்திகள்
புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

Jun 24, 2025 - 04:20 PM -

0

புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

நான்கு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியது. 

அந்தக் குழு கடந்த 20ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. 

அதற்கமைய ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் (ETF) தலைவராக சோமசிறி ஏக்கநாயக்க, இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பீ.ஏ.பி.கே.ஆர். பமுணு ஆரச்சி, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக எம்.ஆர்.எச். சுவர்ணதிலக்க மற்றும் பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பனியின் தலைவராக எஸ். நேசராஜன் ஆகியோரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

Comments
0

MOST READ
01
02
03
04
05