Jun 24, 2025 - 11:21 PM -
0
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுக்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது வங்கித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு வழங்கக் கூடிய தீர்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, கொள்கை ரீதியான பொறிமுறையின் அவசியத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்), சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டீ. கமகே ஆகியோருடன் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

