செய்திகள்
தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

Jun 25, 2025 - 11:03 AM -

0

தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

புளத்சிங்கள, ஹல்வத்துறை பகுதியில் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலுக்கு உள்ளானவர், ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

இறந்தவர் ஹல்வத்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல் தொடர்பாக 23 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05