Jun 25, 2025 - 12:27 PM -
0
இலங்கையின் முன்னணி பார்வை, கேட்கும் திறன் மற்றும் மூக்குக்கண்ணாடி தீர்வுகளை வழங்கும் நிறுவனமான விஷன் கெயார் (Vision Care) 2025ஆம் ஆண்டுக்கான 58வது மாவட்டங்களுக்கிடையிலான கூட்டிணைந்த பாடசாலை ஹாக்கி போட்டிக்கு இலங்கை பாடசாலை ஹாக்கி சங்கத்துடன் (SLSHA) இணைந்து தலைமை அனுசரணையை வழங்குகியது. இலங்கை ஹாக்கி கூட்டமைப்பு ஆஸ்ட்ரோ டர்ஃபில் நடைபெற்ற இந்த நான்கு நாள் நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 23 அணிகள் பங்கேற்றன. விளையாட்டு அனுசரணையைத் தாண்டி, விஷன் கெயார் அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான இலவச மொபைல் கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தது. இது, கல்வி மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கான தெளிவான பார்வையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை பாடசாலை ஹாக்கி சங்கத்தின் செயலாளர் அனுருத்த ஹேரத் பண்டார கூறுகையில் இந்த ஆண்டுக்கான ஹாக்கி போட்டிக்கு தலைமை அனுசரணை வழங்கியதுடன், இலவச கண் பரிசோதனையால் எங்கள் வீரர்களின் நலனையும் உறுதிப்படுத்திய விஷன் கெயாருக்கு, எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விஷன் கெயாரின் ஒத்துழைப்பு நிகழ்வுக்கு சிறப்பையும் மதிப்பையும் சேர்த்தது”.
விஷன் கெயாரின் சந்தைப்படுத்தல் மேலாளர் கசுன் விஜேசேன கூறுகையில் “விளையாட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாக விஷன் கெயாரில் நாங்கள் நம்புகிறோம். மேலும் இலங்கை பாடசாலை ஹாக்கி சங்கம் போன்ற விளையாட்டு அமைப்புகளை ஆதரிப்பது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கான எங்கள் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகிறது. ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் கூர்மையான பார்வையும் நிலையான கவனமும் மிக முக்கியம். வீரர்களின் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முயற்சியில் பங்கெடுப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். விஷன் கெயார், விளையாட்டு வீரர்கள் மற்றும் செயல்பாட்டுடன் கூடிய நபர்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கண்ணாடி தீர்வுகளையும் வழங்குகின்றது.
58 ஆண்டுகள் கடந்தும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் மாவட்டங்களுக்கிடையிலான கூட்டிணைந்த பாடசாலை ஹாக்கி போட்டி இலங்கையின் நீண்டகால பாரம்பரியமும் மரியாதையும் கொண்ட பாடசாலைகள் மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, ஆண்கள் பிரிவில் மாத்தளை பாடசாலைகள் அணி சாம்பியன் வென்றது, அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் கொழும்பு பாடசாலைகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விஷன் கெயாரின் அனுசரணையானது தடகள வளர்ச்சியை ஆதரித்தல், குழந்தை கண் பராமரிப்புக்கான ஆதரவு மற்றும் இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களை மேம்படுத்துதல் என்ற அதன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது.

