Jun 25, 2025 - 04:50 PM -
0
பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஜூலை முதலாம் திகதி முதல் மேற்படி கட்டண குறைப்பு அமுலுக்கு வரும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி, ஒவ்வொரு வருடமும் ஜூலை முதலாம் திகதி முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும், இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (25) பிற்பகல் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் பேருந்து சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்றது.
பேருந்து கட்டணம் 2 வீதம் அல்லது அதற்கு மேல் திருத்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இதற்கு பேருந்து சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை வௌியிட்டதோடு, இதன் பலன் பயணிகளுக்கோ அல்லது பேருந்து சங்கங்களுக்கோ கிடைக்காது என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
சதவீத அடிப்படையில் ஒரு ரூபா அல்லது இரண்டு ரூபா குறைக்கப்படும் என்றும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

