Jun 25, 2025 - 07:17 PM -
0
சிறைச்சாலை அதிகாரிகள் 16 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறப்பு தர கண்காணிப்பாளர்கள், ஒரு கண்காணிப்பாளர், 8 உதவிக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 சிறைச்சாலை பதில் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ.சி. கஜநாயக்க போகம்பரை சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை தலைமையகத்திற்கும், சிறப்பு தர சிறைச்சாலை கண்காணிப்பாளர் டி.ஆர்.எஸ். சில்வா மஹர சிறைச்சாலையிலிருந்து வெலிகடை சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பதில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் சுதன் ரோஹண, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் எல்.பி.வர்ணகுலசூரிய வாரியபொல சிறைச்சாலையிலிருந்து போகம்பர சிறைச்சாலைக்கும், உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் வி. அபேதீர கேகாலை சிறைச்சாலையிலிருந்து வாரியபொல சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் கே. டெப் களுத்துறை சிறைச்சாலையிலிருந்து பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதோடு, சிறைச்சாலை அவசர பதிலளிப்பு படையணியிலிருந்து உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பிரேமதிலக்க அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பி. பெரேரா பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. உதயகுமார பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சகோதரரான உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என். உபுல்தெனியவும் மகஸின் சிறைச்சாலையிலிருந்து வட்டரக்க சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆர். பிரபாத் வீரவில சிறைச்சாலையிலிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஏ. ராஜகருணாநாயக்க சிறைச்சாலை அவசர பதிலளிப்பு படையணிக்கும், உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிரதீப் வசந்த குமார, வட்டரக்க சிறைச்சாலையிலிருந்து மாத்தறை சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் என். பெர்னாண்டோ அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து வீரவில சிறைச்சாலைக்கும், உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் மங்கள வெலிவிட்ட மாத்தறை சிறைச்சாலையிலிருந்து பல்லேகலே சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
அத்தோடு, உதவி சிறைச்சாலை கண்காணிப்பாளர் குமார எதிரிசிங்கவும் மஹர சிறைச்சாலையிலிருந்து கேகாலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

