செய்திகள்
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள்

Jun 25, 2025 - 11:34 PM -

0

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் அரசியல்வாதிகள்

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை இன்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05