Jun 25, 2025 - 11:53 PM -
0
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ள மகஜரில், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையும் கோரப்பட்டுள்ளது.
இன்று பி.ப 3.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள சிவில் சமூகத் தரப்பினரால் உயர்ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் கீழ்வரும் தரப்பினர் கையொப்பமிட்டுள்ளனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் தமிழ்த் தேசிய பேரவை
சி.வி.கே சிவஞானம் பதில் தலைவர் இலங்கை தமிழரசு கட்சி
செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் தமிழீழ விடுதலை கழகம் இணைத் தலைவர் - ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
த.சித்தார்த்தர் இணைத்தலைவர் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
ந.சிறீகாந்தா சிரேஸ்ட சட்டத்தரணி தலைவர் தமிழ்த் தேசிய கட்சி
கே.வி.தவராசா ஜனாதிபதி சட்டத்தரணி தலைவர் ஜனநாயக தமிழரசு கட்சி
P.N.சிங்கம் தமிழ் சிவில் சமூக அமையம்
பொ.ஐங்கரநேசன் தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்
வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம்
யோ.கனகரஞ்சினி செயலாளர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்
தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் திருகோணமலை
ஆ.தீபன்தலீசன் உபதலைவர் இலங்கை ஆசிரியர் சங்கம்
ந.இனபநாயகம் தலைவர் கிராமிய உழைப்பாளர் சங்கம்
க.பிறேமச்சந்திரன் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தலைவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
செ.கஜேந்திரன் பொதுச் செயலாளர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
மு.சந்திரகுமார் பொதுச் செயலாளர் சமத்துவக் கட்சி
--