செய்திகள்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள்

Jun 26, 2025 - 08:18 AM -

0

குழந்தைகளிடையே அதிகரிக்கும் நோய்கள்

நாட்டில் குழந்தைகள் இடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

உணவு உட்கொள்ளும் முறைமையே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன தெரிவித்தார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட அவர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் குழந்தைகளிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். 

இதேவேளை, இலங்கையில் 5 பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு உள்ளாகி வருவதாக தெரியவந்துள்ளது. 

குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக சுகாதார நிபுணர் தினுஷா பெரேரா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05