Jun 26, 2025 - 12:39 PM -
0
போதைப்பொருள் அச்சுறுத்தலை நிரந்தரமாக ஒழிக்க தற்போதைய அரசாங்கம் நல்லெண்ணத்துடன் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட பிரதி அமைச்சர், நீதி அமைச்சு, முப்படைகள், பொலிஸார் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான குழு எடுக்கும் தீர்மானங்களால் போதைப்பொருள் வர்த்தகர்கள் பதற்றமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருளை சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஒழிப்பதே அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் என்றும் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஒரு விசேட நிகழ்வு இடம்பெற்றது. அங்கு ஏராளமான மக்களின் பங்கேற்புடன் ஒரு பேரணியும் நடைபெற்றது.

