Jun 26, 2025 - 02:31 PM -
0
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட போதைப்பொருள் வர்தகரானகம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா உள்ளிட்ட பிரதிவாதிகள் இருவருக்கு எதிரான வழக்கை ஒக்டோபர் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டது.
இந்த வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, சிறையில் இருந்த வெலே சுதா, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதி, விசாரணையை ஒக்டோபர் 10 மற்றும் 14 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் வெலே சுதா தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

