Jun 26, 2025 - 06:07 PM -
0
செம்மனி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைத்து வரப்பட்ட பத்திற்கும் மேற்பட்ட விஷமிகளாலேயே குழப்பத்தை ஏற்படுத்தினர் என பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.
செம்மணியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானதும் அவர்களின் உரிமையை பெறுவதற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது.
இதனை குழப்பும் வகையில் செம்மனி பகுதியில் கிளிநொச்சியில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் அழைக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விஷமிகளாலேயே அங்கு பெரும் பதட்ட நிலையும் அச்ச நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்களுக்கு மிக விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கிளிநொச்சியில் கள்ளகாணி பிடிப்பவரும் பார்போமிட் பெறுவதற்கு விண்ணப்பித்து விட்டு இருப்பவரும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுமே அங்கு பதற்ற நிலையை தோற்றுவித்ததாகவும் இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
--