வணிகம்
செரண்டிப் நிறுவனம், பாடசாலை மரநடுகைத் திட்டத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடியது

Jun 27, 2025 - 11:35 AM -

0

செரண்டிப் நிறுவனம், பாடசாலை மரநடுகைத் திட்டத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடியது

செரண்டிப் நிறுவனம் (SFML), 2025ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையிலும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் ஒரு சிறப்பு பாடசாலை மரநடுகைத் திட்டத்தை தொடங்கியது. ஜூன் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சி, பாடசாலை சிறுவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்ப்பதையும் இளைஞர் விவசாயக் கல்வியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. 

இப்பாடசாலை மரநடுகைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2025 ஜூன் 05 ஆம் திகதியன்று ஹோமாகம, பிடிபான மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது SFML, பாடசாலைக்கு பழக்கன்றுகள் மற்றும் அத்தியாவசிய விவசாயக் கருவிகளை நன்கொடையாக வழங்கியது. 

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் இணைந்து SFMLஇன் சிரேஷ்ட தலைமைத்துவக் குழு பாடசாலை மைதானத்தில் முதல் மரத் தொடரை நாட்டியது. 

இவ் விழா பாடசாலைப் பிரதிநிதிகளின் வரவேற்பு உரையுடன் ஆரம்பித்து நிறுவனம் பற்றிய அறிமுகத்துடன் தொடர்ந்தது. இதனை தொடர்ந்து தரநிர்ணய பிரிவைச் சேர்ந்த பஞ்சானி கருணாசேனவினால் திட்டம் விளக்கப்பட்டது. மேலும், பாடசாலை அதிபர் மற்றும் தாவர வைரஸ் குறியீட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன் நிகழ்வின் முக்கியத்துவத்தை பற்றி விரிவாகக் கூறினர். 

செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான விஜய் சர்மாவின் உற்சாகமூட்டும் உரையை தொடர்ந்து பாடசாலைக்கு கருவிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்தவர்களிடையே நடாத்தப்பட்ட குலுக்கல் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

செரண்டிப் குழு மற்றும் மாணவர்கள் இணைந்து கூட்டாக முன்னெடுத்த மரநடுகை முயற்சி இந் நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது. நன்மை பயக்கும் கல்வி பங்காளித்துவத்தின் ஆரம்பத்தை குறிக்கும் இவ்விழா, நன்றியுரையுடன் நிறைவடைந்தது. 

மேலும், இம் மரநடுகை முயற்சியானது 2030ஆம் ஆண்டுக்குள் 1,000 மரங்களை நடும் செரண்டிப் நிறுவனத்தின் ISO 14064-1இற்கான உறுதிப்பாட்டை நேரடியாக ஆதரிக்கிறது. இது இலங்கையின் வனப்பகுதிக்கு பங்களிக்கும் அதே வேளை இயற்கை கார்பன் தன்மயமாக்கல் முறைகளின் மூலம் பச்சை வீட்டு வாயு வெளியீட்டை 25% குறைக்கும் இலக்கை அடைய உதவுகிறது. இத் திட்டம் 2035ஆம் ஆண்டில் கார்பன் நடுநிலை இலக்கை நோக்கிய நிறுவனத்தின் உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. 

பாடசாலை மரநடுகைத் திட்டம் ஆனது நிலையான பாரம்பரியத்தை உருவாக்குவதற்கான செரண்டிப் நிறுவனத்தின் நீடித்த அர்ப்பணிப்பை எதிரொலிப்பதுடன் தேசத்தை போஷிப்பதுடன் நின்று விடாது எதிர்காலத் சந்ததியினருக்காக சூழலை பாதுகாப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05