Jun 27, 2025 - 04:56 PM -
0
ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி குழு, 2025 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் உட்பட உலகளவில் 531 திரைத்துறைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குர்ரானா, இயக்குநர் பாயல் கபாடியா, ஆவணப்பட இயக்குநர்கள் அருண் பட்டாராய், ஸ்மிருதி முந்த்ரா, கேஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, தயாரிப்பு நிர்வாகி ரவி அஹுஜா, விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையைச் சேர்ந்த ரவி பன்சல், அபிஷேக் நாயர், யுகந்தர் தம்மரெட்டி, ஜதீன் தக்கர் மற்றும் பிறருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அழைப்பை ஏற்கும் பட்சத்தில் ஆஸ்கர் விருது வாக்கெடுப்பில் பங்கேற்பர்.
இதற்கு முன், இந்தியாவில் இருந்து மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, ராம் சரண், ஜூனியர் என்டிஆர், கீரவாணி ஆகியோர் அகாடமி உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது கமல்ஹாசனும் இணையவுள்ளார். அகாடமியில் மொத்தம் 10,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
கமல்ஹாசனின் நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஹே ராம் ஆகிய படங்கள் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு விருது பெறாமல் திரும்பின.