சினிமா
பிரபல நடிகை திடீர் மரணம்

Jun 28, 2025 - 08:23 AM -

0

பிரபல நடிகை திடீர் மரணம்

இந்தி நடிகை மற்றும் இந்தி பிக் பாஸ் 13 சீசனின் பிரபலம் ஷெஃபாலி ஜரிவாலா. இவருக்கு வயது 42. 

இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இவரை உடனடியாக அவரது கணவர் மும்பையில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், அங்கே அவரைப் பரிசோதித்து பார்த்த வைத்தியர்கள், ஷெஃபாலி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். 

இவர் இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே அது தெரியவரும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளது. 

ஆனால், ஷெஃபாலி இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் யாரும் இன்னமும் உறுதி செய்யவில்லை. 

இந்தச் செய்தியை இவர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையும், அதன் இதய நோய் நிபுணரும் உறுதி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தியை அறிந்த பிரபலங்கள் பலரும், ஷெஃபாலிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05