Jun 28, 2025 - 01:09 PM -
0
பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் அணித்தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சுற்றுலா பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தீர்மானித்துள்ளார்.
பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்தஞ ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட அவர், இனி டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை தொடர விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
அணியின் முன்னேற்றத்திற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், தனது முடிவு அணிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ பங்களாதேஷ் அணியை 14 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார் மற்றும் 2023 நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அவரது தலைமையின் கீழ் பங்களாதேஷ் அணி 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 2024 ஓகஸ்ட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் அணி தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

