செய்திகள்
வாகன விபத்துக்களால் ஐவர் பலி

Jun 29, 2025 - 07:33 AM -

0

வாகன விபத்துக்களால் ஐவர் பலி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

நுரைச்சோலை, வெல்லவாய, ஹோமாகம மற்றும் கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுகளில் நேற்று (28) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி - கற்பிட்டி வீதியில் தலுவ 06வது மைல்கல் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனியார் பேருந்து ஒன்று வீதியின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது, பேருந்தில் இருந்த இருவர் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்னால் காத்திருந்த நிலையில், ​​பாலாவி திசையிலிருந்து கற்பிட்டு திசை நோக்கிச் சென்ற லொறி ஒன்று இருவர் மீதும் பேருந்து மீதும் மோதியது. 

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் 15 மற்றும் 74 வயதான ஜா-எல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையில், கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் A-09 வீதியில் புதுக்குளம் சந்தி பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று திடீரென வீதியின் வலதுபுறம் திரும்பிய போது, ​​அதே திசையில் பயணித்த பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் அதில் பயணித்த இரண்டு பயணிகளும் படுகாயமடைந்து, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 

உயிரிழந்தவர் நெடுங்கேணியைச் சேர்ந்த 46 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், வெல்லவாய பொலிஸ் பிரிவின் எல்ல-வெல்லவாய வீதியில் 6வது மைல்கல் பகுதியில் லொறியொன்று வளைவில் பயணித்துக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. 

விபத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பண்டாரவளை, துங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், ஹோமாகம பொலிஸ் பிரிவின் ஹைலெவல் வீதியில் உள்ள பிடிபன சந்தியில், பேருந்து ஒன்று, கிளை வீதியில் இருந்து ஹைலெவல் வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் மாவத்கம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05