Jun 30, 2025 - 06:42 AM -
0
ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹசலக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய கல்வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவரும் 39, 64 வயதுடைய செவனகல மற்றும் அம்பகஹபெலெஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

