வடக்கு
மன்னார் நகர முதல்வர் - அரசாங்க அதிபருக்கிடையில் விசேட சந்திப்பு

Jul 1, 2025 - 11:58 AM -

0

மன்னார் நகர முதல்வர் - அரசாங்க அதிபருக்கிடையில் விசேட சந்திப்பு

மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இன்று (01) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களுடன் விசேட சந்திப்பை மேற்கொண்டார்.

 

இதன் போது மன்னார் நகர சபை பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், மன்னார் நகர சபை பிரிவில் கண்டறியப்பட்ட குறைகள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடபட்டதோடு, முன்னெடுக்கப்பட உள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

 

குறித்த சந்திப்பின் போது  மன்னார் நகர சபை செயலாளர் லோகேஸ்வரன் மற்றும் நகரசபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05