Jul 1, 2025 - 03:12 PM -
0
விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய பல வருடங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றி சட்டவிரோதமான முறையில் கம்பளை - கண்டி பிரதான வீதியில் முருகன் ஆலயம் முன்பாக உள்ள உரம் வியாபார நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையத்தினையும் அதன் களஞ்சிய சாலையினையும் கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் விவசாய திணைக்கள மற்றும் பீடைகொல்லி பிரிவு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் பங்களிப்புடன் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதில் அங்கிருந்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியான சட்ட விரோத உரம் மற்றும் பூச்சிகொல்லிகளையும் கைப்பற்றினர்.
சமீபத்திய காலங்களில் உர பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட உரவகைகள் மேற்படி கடையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அமைய அடிப்படையிலும் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நுகர்வுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள். மற்றும் பூச்சிக்கொல்லிகள். பதிவு செய்யப்படாத ரசாயண உரங்கள் காலாவதியான விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் அடையாளம் காணப்படாத வகை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிக நச்சுத்தன்மையுள்ள விவசாய இரசாயனங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேற்படி சட்டவிரோத இரசாயனங்கள் அனைத்தும் தினசரி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேற்படி உரக் களஞ்சியசாலையில் 2014 ஆண்டு போன்ற பத்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட காலாவதியான பொருட்களும் இங்கு காணப்பட்டன.
--